இயக்குநர்கள் குழு

Sriyan Cooray

சிரியன் கூரே

தவிசாளர், பணிப்பாளர் சபை (சுயாதீனம்)

திரு. சிரியன் கூரே அவர்கள் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சி பணிப்பாளர் சபையில் 2018 ஒகஸ்ட் முதல் பணியாற்றியுள்ளதுடன் அவர் சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளர் ஆவார். அவர் தற்போது பணிப்பாளர் சபையின் தவிசாளராக காணப்படுகின்றார். 

HSBC வங்கியில் 28 வருட அனுபவங்களுடன் ஒரு முழுமையான வங்கியலாளரான, திரு. கூரே அவர்கள்  HSBC வங்கியில் நிதி, செயற்பாடுகள், இணக்கம், நிருவாகம் மற்றும் சில்லறை வங்கிச்சேவை எனப் பல்வேறு விதமான பரந்த பரப்புகளில் பணியாற்றியுள்ளதுடன் அவர் 2007 ஆம் ஆண்டு முதல் வகித்து வந்த பதவியான HSBC- இலங்கை மற்றும் மாலைத்தீவு, பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் பதிவியிலிருந்து 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஓய்வுபெற்றார்.   HSBC வங்கியில் பணியாற்றியபொழுது, திரு. கூரே அவர்கள்  HSBC சேமலாப மற்றும் ஓய்வூதிய நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் உறுப்பினராக, அதனது நிறைவேற்றுக் குழுவில் 25 வருடங்களாக பணியாற்றியுள்ளதுடன், 2015/2016 ஆம் ஆண்டுகளில் வங்கிச்சேவை தொழிநுட்ப ஆலோசனை குழுவிற்கு தலைமைத்தாங்கியும், சொத்துகள் மற்றும் பொறுப்புகள் குழு, மனிதவள மீளாய்வு குழு மற்றும்  HSBC இன் தகவல் தொழிநுட்ப வழிகாட்டல் குழு உள்ளிட்ட HSBC இன் பல்வேறு உள்ளக குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். அவர் வங்கியின் இரண்டாம் நிலை முகாமைத்துவ குழுக்களை உள்ளடக்கிய HSBC வங்கியின் முகாமைத்துவ குழுவின் தவிசாளராகவும் கடைமையாற்றியுள்ளதுடன்  HSBC வங்கியுடனான அவரது கடந்த 15 வருட வங்கித் தொழில் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்றதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.  HSBC இல் இணைவதற்கு முன்னதாக, திரு.கூரே அவர்கள், 1987-1990 வரையில் நிதிக் கட்டுப்பாட்டாளர்  எனும் தகுதியில்,  Speville M & W Ltd இல் ஒரு அங்கமாக காணப்பட்டதுடன், அதற்கு முன்னதாக,  KPMG Ford Rhodes Thornton & Company இல் பட்டயக் கணக்காளராகவும் பணியாற்றியிருந்தார்.  

திரு.கூரே அவர்கள் முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவகத்தின் உறுப்பினர் ஒருவராக காணப்படுவதுடன் HSBC குழுமத்தினால் வழங்கப்பட்ட பரந்த நிறைவேற்றதிகார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து செழுமையான நிபுணத்துவத்தினையும் பெற்றுள்ளார். 

அவர் தற்போது ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சியின் சுயாதீன நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

 

2

கெலும் எதிரிசிங்கே

பணிப்பாளர் / பிரதம நிறைவேற்றதிகாரி (நிறைவேற்றதிகாரம்)

திரு.கெலும் எதிரிசிங்கே அவர்கள்,  HSBC இலங்கை மற்றும் HSBC மாலைத்தீவு என்பவற்றில் 30 வருடங்களை பூர்த்திசெய்ததன் பின்னர் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியில் ஜனவரி 2024 இல் இணைந்தார். அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான  HSBC வங்கியின் இடர்நேர்வு குழுவின் தவிசாளராக கடமையாற்றி, பிரதம இடர்நேர்வு அதிகாரியாக இறுதியாக கடமையாற்றியிருந்தார்.  HSBC இலான அவரது வங்கிச்சேவை அனுபவமானது தொழில்முயற்சிகளின் இடர்நேர்வு முகாமைத்துவம், வர்த்தக வங்கிச்சேவை, நிதிய முகாமைத்துவம், படுகடன் மறுசீரமைப்பு, நிதிசார் பகுப்பாய்வு மற்றும் கிளை வங்கிச்சேவை என்பன உள்ளடங்கலான பல்வேறு விதமான  தலைமைத்துவ வகிபாகங்களை உள்ளடக்குகின்றது. 

திரு.எதிரிசிங்கே அவர்கள் வங்கித்தொழிலாளர்களுக்கான பட்டய நிறுவகத்துடன் இணைந்த மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திடமிருந்து விஞ்ஞானமானி பட்டத்தினையும் அவுஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபார நிருவாகத்தில் முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார். பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர் நிறுவகத்திடமிருந்து நிதி முகாமைத்துவத்தில் டிப்ளோமா மற்றும் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து திறைச்சேரி மற்றும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை செயற்பாடுகளில் சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளார். திரு.எதிரிசிங்கே அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் வங்கித் தொழில் கற்கைளுக்கான நிலையத்தின் துறைசார் ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் காணப்படுகின்றார். 

திரு.எதிரசிங்க அவர்கள் வங்கியின் துணைநிறுவனங்களான டிவலெப்மெண்ட் ஹோல்டிங்க்ஸ் (தனியார்) லிமிடெட் தவிசாளர் மற்றும் NDB கெபிடல் ஹோல்டிங்கஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் போன்ற நியமனங்களையும் சமகாலத்தில் வகிக்கின்றார். அவர் இலங்கை வங்கிச் சங்க (உத்தரவாதப்படுத்தப்பட்ட) லிமிடெட்டின் பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

Bernard Sinniah

பெர்ணார்ட் சின்னையா

பணிப்பாளர் (சுயாதீனமற்ற)

திரு.பெர்ணார்ட் சின்னையா அவர்கள் மார்ச் 2019 இலிருந்து நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியுள்ளதுடன் அவர் சுயாதீனமற்ற நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

அவர் சிட்டிபேங்க் இன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் என்பதுடன்  FX Corporate Sales and e-FX Solutions என்பவற்றின் பூகோள தலைவராகவும் காணப்பட்டார். அவரது தொழில்வாழ்வை சிட்டி பேங்க் கொழும்பு இல் தொடங்கி, பின்னர் சிட்டிபேங்க் அவுஸ்திரேலியாவிற்கு சென்று, லண்டனை மையமாகக் கொண்டு அவரது தொழில்வாழ்வை நிறைவுசெய்ததன் பின்னர் 38 வருடகால சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். 

திரு.சின்னையா அவர்கள் பிரயோக நிதியியலில் (மெக்கையர் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா) முதுமாணி பட்டத்தினைப் பெற்றவராவார்.

திரு.சின்னையா அவர்கள்  NDB கெப்பிடல் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட்டின் தவிசாளராக காணப்படுவதுடன்  NDB செக்கியுரிட்டிஸ் (தனியார்) லிமிடெட்,  NDB வெல்த் மெனெஜ்மென்ட் லிமிடெட்,  NDB முகாமைத்துவ வங்கி லிமிடெட்,  NDB கெப்பிட்டல் லிமிடெட் (பங்காளதேஷ்) மற்றும்  NDB சேபைர் பார்ட்னர்ஸ் லங்கா (தனியார்) லிமிடெட் போன்ற வங்கியின் ஏனைய பல்வேறு துணைநிறுவகங்களில் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். 

Sujeewa Mudalige

சுஜீவா முதலிகே

பணிப்பாளர் (சுயாதீனம்)

திரு.சுஜீவ முதலிகே அவர்கள் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் 2020 ஜனவரி முதல் பணியாற்றியுள்ளதுடன் சுயாதீனமான நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

திரு.முதலிகே அவர்கள் அரச மற்றும் தனியார் துறை ஒழுங்கமைப்புகளின் கணக்காய்வு குழு தலைவராக பரந்த அனுபவத்தினைக் கொண்டவராவார். 2012 முதல் 2019 வரையில் ஹற்றன் நேஷனல் வங்கி பிஎல்சியின் பணிப்பாளராக காணப்பட்டதுடன்  HNB  இலான அவரது பணிக்காலத்தில் அதன் பணிப்பாளர் சபை உபகுழுக்கள் பலவற்றில் தலைவராகவும் உறுப்பினராகவும் விளங்கியுள்ளார். அவர் 2023 தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரையில் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன் அவரது தொழில்வாழ்கை முழுவதிலும் உள்ளூரிலும் வெளியூரிலுமாக பல பதவிகளையும் வகித்துள்ளார். 

பட்டயக் கணக்காளராக அவரது அனுபவங்கள் 30 வருடங்களைத் தொட்டுச்செல்கின்றது. அவர் FCA (ICA - SL), FCMA (CIMA – UK), FCCA (ACCA – UK) மற்றும் FCPA (CPA – Australia) ஆகியவற்றின் உறுப்பினரும் ஆவார். அத்துடன் அவர் ICASL இன் முன்னாள் தலைவர் என்பதுடன் ICASL பேரவையினதும் உறுப்பினராகக் காணப்பட்டதுடன், CIMA UK இன் இலங்கைப் பிரிவு ஆளுகைக் குழுவினது உறுப்பினராகவும் விளங்கியுள்ளார்.

திரு.முதலிகே அவர்கள் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத எண்ணிறந்த கம்பெனிகள் அதைப்போன்று ஏனைய நிறுவனங்களில் பணிப்பாளர், தவிசாளர் மற்றும் இதரப் பதவிகளையும் வகித்துள்ளார். 

Kushan D’Alwis,PC

குஷான் டி அல்விஸ்

பணிப்பாளர் (சுயாதீனம்)

திரு. குஷான் டி அல்விஸ் அவர்கள் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் 2020 ஜுலை முதல் பணியாற்றியுள்ளதுடன் சுயாதீனமான நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

திரு.அல்விஸ் அவர்கள் சட்டத்தரணியொருவராக 34 வருட அனுபவத்துடன் சனாதிபதி சட்டத்தரணியாகவும் காணப்படுகின்றார். அவர் இலங்கையின் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், வர்த்தக மேல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் முன்னிலையாகி குடியியல், பெருநிறுவன, வர்த்தக மற்றும் நிருவாக சட்டங்களில் அதீத அனுபவத்தினைக் கொண்டுள்ளார். அத்துடன் அவர் நடுத்தீர்ப்பு, பெருநிறுவன சட்ட விடயங்களில் ஆலோசனை வழங்கல், ஒழுங்குபடுத்தல் சட்டகவேலைகள், இணக்கத் தேவைப்பாடுகள் மற்றும் தக்க சட்ட விழிப்பு போன்ற மாற்று பிணக்கு தீர்வுப் பொறிமுறைகளிலும் அனுபவமுடையவராகக் காணப்படுகின்றார். திரு. டி அல்விஸ் அவர்கள் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழுவின் உறுப்பினர், வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கான சட்ட ஆலோசனை குழுவின் உறுப்பினர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய பேரவையின் உறுப்பினர்,வாடகை மீளாய்வு சபையின் உபதவிசாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர், இலங்கை வியாபார மீட்பு மற்றும் கடனிறுவகையின்மை சட்டவாளர் சங்கத்திற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி, கொழும்பு சட்ட சமூகத்தின் உபதலைவர், மற்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் உபதவிசாளராகவும் கடமையாற்றியுள்ளார். 

திரு. குஷான் டி அல்விஸ் அவர்கள் இலங்கை புகையிலை தனியார் கம்பெனி மற்றும் வுர்திய லங்கா (தனியார்) லிமிடெட்  ஆகியவற்றின் பணிப்பாளராகவும் தற்போது பணிபுரிகின்றார். 

Kasturi Chellaraja

கஸ்தூரி செல்லராஜா

பணிப்பாளர் (சுயாதீனம்)

திருமதி. கஸ்தூரி செல்லராஜா அவர்கள் நேஷனல் டிவலெப்மென்ட் வங்கியின் (பிஎல்சி) பணிப்பாளர் ஒக்டோபர் 2022 முதல் பணியாற்றியுள்ளதுடன் சுயாதீனமான நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார்.

திருமதி. செல்லராஜா அவர்கள் கணக்காய்வு பயிலுநராக 1988 ஆம் ஆண்டில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் 2002 ஆம் ஆண்டில் ஹேமாஸ் நிறுவனத்தில் இணைந்து அங்கு பல்வேறு சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகளை வகித்ததுடன் 2020 தொடக்கம் 2024 வரையில் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பதிவியேற்று இலங்கையின் பட்டியலிடப்பட்ட பெருநிறுவனங்களின் முதலாவது பெண் நிறைவேற்றதிகாரியாகவும் விளங்கினார். அவர் ஹெல்த்கெயார் மற்றும் நுகர்வோர் துறைகள் உள்ளிட்ட ஹேமாசின் ஏனைய பல துணை நிறுவனங்களின் சபைகளிலும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இறுதியாக இலங்கை மருந்தாக்க கைத்தொழிற்றுறை சம்மேளனத்தில் தலைவராகக் கடைமையாற்றியுள்ளதுடன் மார்ச் 2022 வரையில் இலங்கை தேசிய விளையாட்டுப் பேரவையின் பேரவை உறுப்பினராகவும் SLID (இலங்கை பணிப்பாளர் நிறுவகம்) பணிப்பாளர் சபை, CIMA ஸ்ரீ லங்கா மற்றும் இலங்கையின் வளர்ந்துவரும் முன்னணி சூழல் முறைமையான, லங்கன் ஏஞ்சல்ஸ் நெட்வேர்க் (LAN) போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார். இவர் நாட்டில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடிய பன்னிரு உயர் பெண்ணாளுமைகளில் ஒருவராக 2019 ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தினாலும் அத்துடன் இலங்கையில் செல்வாக்குமிக்க ”அறிவார்ந்த” பத்து பெண்மனிகளில் ஒருவராக திறன்கள் மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தார். திருமதி. செல்லராஜா அவர்கள் தேசிய வலைப்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார்.

திருமதி. செல்லராஜா அவர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் பட்டய நிறுவகத்தின் உறுப்பினராவதுடன் Harvard Business School இன் சிரேஷ்ட நிறைவேற்றதிகார தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் பழைய மாணவருமாவார்.

திருமதி. செல்லராஜா அவர்கள் தற்போது 5 hour international Corporation இன் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக (APAC இன் தலைவர்) காணப்படுவதுடன் கெப்பிட்டல் எலையன்ஸ் லிமிடெட் மற்றும் செங்கடகல பினான்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். திருமதி. செல்லராஜா அவர்கள் பல்வேறு கைத்தொழிற்றுறைசார் ஒழுங்கமைப்புகளின் செயற்பாட்டு உறுப்பினராகவும் தற்போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம குழுவிலும் பணியாற்றுவதுடன் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டில் உலக வங்கயின் தெற்காசியாவிற்கான பிராந்திய வெற்றியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

Shweta Pandey

ஸ்வேதா பாண்டே

பணிப்பாளர் (சுயாதீனம்)

திருமதி.ஸ்வேதா பாண்டே  அவர்கள் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் 2023 ஏப்ரல் முதல் பணியாற்றியுள்ளதுடன் சுயாதீனமான நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

திருமதி. பாண்டே அவர்கள் இந்தியாவின் எயார்டெல் கொடுப்பனவு வங்கியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் மற்றும் சிரேஷ்ட உப தலைவரும் ஆவார். அத்துடன் அவர் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள IFC/உலக வங்கி குழும சேவைநாடுநர்களது பாரிய அளவிலான டிஜிட்டல் பரிமாற்ற செயற்றிட்டங்களுக்கு டிஜிட்டல் நிதி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். 

இவர் MIT Sloan School of Management (USA) இடமிருந்து வியாபார முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம், பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கொள்கைகளில் முதுவிஞ்ஞானமானி (UK) மற்றும் பொருளாதாரத்தில் இளமானிப் பட்டங்களையும் (இந்தியா) கொண்டுள்ளார். அவரது தலைமைத்துவத்தை அங்கீகரித்து, 40 “Elite Club 2022” இன் கீழ் 40 சிறந்த பெண்மணிகளில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளதுடன்  எதிர்காலத்தின் முதன்மை புத்தாக்க தலைவராகவும் செல்வாக்குமிக்க மாற்றத்தினை மேற்கொள்பவராகவும் MIT Sloan இனால்  கௌரவிக்கப்பட்டுள்ளார். 

அவர் தற்போது மியன்மாரின் மஹா மைக்ரோபினான்ஸின் பணிப்பாளர் சபையில்  IFC நியமித்த பணிப்பாளராகவும்  மஹா மைக்ரோபினான்ஸ் மற்றும் திரிகுடா ஹில்ஸ் எஸ்சன்சியல்ஸ் டிவைன் புரொடெக்ட் (தனியார்) லிமிடெட்டின் பணிப்பாளர் சபைகளிலும் பணியாற்றுகின்றார். 

Hasitha Premaratne

ஹசித பிரேமரத்ன

பணிப்பாளர் (சுயாதீனம்)

திரு.ஹசித பிரேமரத்ன அவர்கள் நேஷனல் டிவெலெப்மென்ட் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் 2023 ஜுன் முதல் பணியாற்றியுள்ளதுடன் சுயாதீனமான நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் காணப்படுகின்றார். 

திரு.பிரேமரத்ன அவர்கள் பிரன்டிக்ஸ் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அதன் ஒட்டுமொத்த மூலோபாய மற்றும் நிலைமாறு பயணத்தினையும் வழிநடாத்துகின்றார். இவ்வகிபாகத்திற்கு முன்னதாக, குழும நிதிப் பணிப்பாளராகவும் பிரதம மூலோபாய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார். பிரன்டிக்சில் இணைவதற்கு முன்னதாக,  HNB பங்குத்தரகர்கள் (தனியார்) லிமிடெட்டின் ஆய்வுத்துறை தலைவராகவும், CIMA (UK) இல் விரிவுரையாளராக ஒரு தசாப்தகால அனுபவத்துடன், CIMA உலகளாவிய நிதி முகாமைத்துவ விருதுகளில் 2019 ஆம் ஆண்டின்  ”வருடத்திற்கான விரிவுரையாளர்” விருதினையும் வென்றிருந்தார். அத்துடன் அவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பைன்சிற்கான  ACCA (UK) இலும் பணியாற்றியிருந்தார். முன்னதாக அவர், இலங்கை வங்கியின் பணிப்பாளராக, இடர் மற்றும் பிரேரணைக் குழுக்களின் சபைகளை தலைமைத்தாங்கியிருந்ததுடன்,  CIMA ஸ்ரீ லங்கா பணிப்பாளர் சபை, இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு தரநியம கண்காணிப்பு சபைகளில் பணியாற்றி, இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். 

திரு. பிரேமரத்ன அவர்கள் சர்வதேச நிதியியலில் வியாபார நிர்வாக முதுமானிப் பட்டத்தினையும், கணினி விஞ்ஞானத்தில் இளம் விஞ்ஞானமாணிப் பட்டத்தினையும் கொண்டுள்ளார். இவர் CIMA (UK), ACCA (UK), மற்றும் CMA (SL), மற்றும் பூகோள முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவனம் என்பவற்றிலும் உறுப்பினராக காணப்படுகின்றார். 

பிரன்டிக்ஸ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எனும் அவரது வகிபாகத்திற்கும் மேலாக, திரு.பிரேமரத்ன அவர்கள், பிரன்டிக்ஸ் குழுமத்தின் பல்வேறு துணைநிறுவனங்கள் மற்றும் இணைந்த தொழிலார்வங்களிலும் பணிப்பாளராக காணப்படுகின்றார். பிரன்டிக்சிற்கு அப்பால், இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில், எண்ணிறந்த கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களில் தலைமைத்துவ பதவிகள் மற்றும் பணிப்பாளர் சபை வகிபாகங்களை கொண்டிருக்கின்றார்.

Sanjaya Mohottala

சஞ்சய மொஹொட்டல

பணிப்பாளர் (சுயாதீனமற்ற)

திரு. சஞ்சய மொஹொட்டல அவர்கள் 2025 மே 16 ஆம் திகதி முதல் நேஷனல் டிவலெப்மென்ட் வங்கி (பிஎல்சி) பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  

திரு. சஞ்சய மொஹொட்டல அவர்கள் பொஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (BCG) சிரேஷ்ட ஆலோசகராக காணப்படுவதுடன், அதனில் அவர் முன்னதாக முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பங்குதாரராகவும் காணப்பட்டார். BCG இலான 16 வருடத்திற்கும் மேலான அனுபவத்துடன், இந்தோ-பசிபிக் பிராந்தியம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அமெரிக்காவின் உட்கட்டுமான நிதிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் பங்குகள் (PIPE) சேவைநாடுநர்கள், இறைமை செல்வ நிதிகள் (SWF), வங்கிகள், பல்தேசிய கம்பெனிகள், மற்றும் பிராந்திய தொழில்முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அவருடைய நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள் மூலோபாயம், இணைப்பு மற்றும்  கையகப்படுத்தல், முதலீடுகள், மீள்கட்டுமானம், செயற்பாட்டு மேம்படுத்தல்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுது்தல், டிஜிட்டல்மயமாக்கம், மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர்மட்ட பகுப்பாய்வு என்பவற்றை உள்ளடக்குகின்றது. அத்துடன் பல்வேறு இணைப்பு கலந்துரையாடல்கள், இணைப்பிற்கு பின்னரான ஒருங்கிணைப்புகள், இணைத்தலைமையிலான பாரிய உலகளாவிய நிலைமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிற்கும் அவர் தலைமைதாங்கியுள்ளார். முதலீட்டாளர் சபை தவிசாளர், மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ், இலங்கையின் சர்வதேச வர்த்தக சம்மேளனம் போன்றவற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எனப் பல பொதுத்துறை பொறுப்புக்களையும் வகித்துள்ளார். 

அவர்  தனது வியாபார முகாமைத்துவ முதுமாணிப் பட்டத்தினை UCLA Anderson School of Management இடமிருந்தும் (முழுப் புலமைப்பரிசிலாளராக), மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திடமிருந்து விஞ்ஞானமாணிப் (கௌரவ) பட்டத்தினையும் பெற்றுள்ளதுடன்,  தகுதிபெற்ற முகாமைத்துவ கணக்காளராகவும் (CIMA) சந்தைப்படுத்தலில் பட்டப்பின் டிப்ளோமாவினையும் கொண்டவராகவும் காணப்படுகின்றார். அவர் ஒரு முழுதளாவிய புலமையாளராவதுடன் LMDCIMA இன் 2021 ஆம் ஆண்டிற்கான  50 வியாபார முக்கிய புள்ளிகள் மற்றும் முன்னோடிகளில் ஒருவராக பெயர்குறிப்பிடப்பட்டிருந்தார். திரு.மொஹொட்டல அவர்கள் நாடுகளை அபிவிருத்தி செய்வதற்கான நோர்வே நிதியத்திற்காக NDB பணிப்பாளர் சபையினால் பிரேரிக்கப்பட்டவராகவும் காணப்பட்டார்.  

BCG இற்கான சிரேஷ்ட ஆலோசகர் என்பதற்கும் மேலதிகமாக, திரு. மொஹொட்டல அவர்கள் சொப்ட்லொஜிக் லைப் இன்சூரன்ஸ் பிஎல்சி, ஓர்பிடல் கினெடிக் தனியார் லிமிடெட்,இன்பினிடி தனியார் லிமிடெட் மற்றும் ஏனைய பல கம்பெனிகளின் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகிக்கின்றார்.