டிஜிட்டல் வங்கி தீர்வுகள்

NEOSBiz உடன் புரட்சிகர வங்கி சேவையை அனுபவிக்கவும்!

NEOSBiz என்பது இலங்கையில் முதன்முறையாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SMEs) மற்றும் நிறுவனங்களை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் பயன்பாட்டின் வடிவிலான முழுமையான தீர்வாகும். தனிநபர் தொழில், கூட்டுத்தொழில், வரம்பற்ற பொறுப்பு நிறுவனம் அல்லது கிளப்/சங்கம் என எதுவாக இருந்தாலும், NEOSBiz மூலம் நீங்கள் உங்கள் நிதிகளை திறம்படவும், எளிதாகவும், பாதுகாப்பாகவும் மேலாண்மை செய்யலாம்.

NEOSBiz பயன்பாட்டை எந்த ஸ்மார்ட் போனிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம் உங்களைப் போன்ற புத்திசாலி வணிக உரிமையாளர்கள் சேவைக்கு பதிவு செய்து, தனிப்பட்ட பயனர்களை நியமித்து, அவர்களுக்கு வரம்புகள் மற்றும் நிலைகள் வழங்கி, அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளைச் செய்ய வழி செய்யலாம்.

முக்கிய அம்சங்கள்

எல்லையற்ற வங்கி சேவை

  • 24/7 கிடைக்கும்
  • நீங்கள் நகரும் இடமெல்லாம், உங்களின் வசதிக்கேற்ப பரிவர்த்தனைகள் உருவாக்கும் வசதி
  • உங்கள் வணிகத்திலிருந்து செல்லும் அனைத்து கட்டணங்களையும் கண்காணிக்கும் திறன்
  • அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் Maker-Checker சரிபார்ப்பு
  • கட்டண செயல்முறையை விரைவாகவும் துரிதமாகவும் மாற்ற அங்கீகார நிலைகள்

உங்கள் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

  • வாடிக்கையாளர் வரையறுத்த பயனர்கள்
  • வாடிக்கையாளர் வரையறுத்த அங்கீகார நிலைகள்
  • அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் Maker-Checker சரிபார்ப்பு
  • ஒரே அங்கீகாரத்துடன் QR வரம்பு

செயல்முறை நேரத்தை குறைக்கும்

  • நிலுவை கட்டண அங்கீகார எச்சரிக்கைகள்
  • உடனடி (Real-time) கட்டண ஆலோசனை விநியோகம்