திறைச்சேரி
NDB வங்கியின் தி றைச்சேரி பிரிவானது உயர்தர தொழிநுட்ப மற்றும் தீர்வை நோக்கி நகரும்
அணுகுமுறைகள் ஊ டாக உங்களது தேவைகளை நிவர்த்திப்பதற்கான புத்தாக்க உற்பத்திகள்,
சேவைகள் மற்றும் தீர்வுக ளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சிறந்த
தரநியமங்களை தழுவி, NDB வங்கியின் தி றைச்சேரிப் பிரிவானது உங்களது தேவைகளை விரல்
நுனியில் வ ளப்படுத்துவதற்காக வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனை, பணம் மற்றும் நி லையான
வருமானச் சந்தை என்பவற்றை வளப்படுத்துவதனில் ஈடுபாடு கொண்டுள்ளது.
NDB வங்கித் திறைச்சேரியில், சேமிப்பு, நிலையான/ தவணை வைப்புகள், கடன்கள் மற்றும்
முற்பணங்கள், வெளிநாட்டு பரிவர்த்த னை கொடுக்கல்வாங்கல்களின் இறக்குமதி மற்றும் விற்பனை,
வெளிநாட்டு பரிவர்த்த னை கொடுக்கல்வாங்கல்களின் ஏற்றுமதி மற்றும் கொள்வனவு, திறைச்சேரி
உண்டியல்கள்/ முறிகள் மற்றும் மீள் கொள்வனவு உடன்படிக்கை/ நேர்மாற்று மீள்கொள்வனவு
உடன்படிக்கை தொடர்பான கொடுக்கல்வாங்கல்கள், வெளிநாட்டுப் பரிவர்த்த னை பாதுகாப்பு
மற்றும் பல் வேறு முதலீட்டு வாய்ப்புக்களுடன் இணைந்த இடர் முகாமைத்துவத் தீர்வுகளையும் நாம்
வழங்குகின்றோம்.
சில பிர தான உற்பத்திகள் மற்றும் அவற்றின் அம்சங்களானவை மேலதிக தகவல்களுக்காக கீழே
விரிவாக வழங்கப்பட்டுள்ளன.
1. உடனடி வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள்
இது தங்க ளது வெளிநாட்டு பரிவர்த்தனை பெறுகைகள் மற்றும் செலுத்துகைகளை முகாமைத்துவம்
செய்வதற்காக தனி நபர்கள் மற்றும் பெருநிறுவனங்களினால் பரந்தளவில் பயன்படுத்தப்படும்
உற்பத்தியொன்றாகும்.
எளிய வார்த்தைகளில் கூறுவதெனில், இது சந்தையில் நிலவுகின்ற உடனடி பரிவர்த்தனை வீதத்தின்
அடிப்படையில் ஒரு நாணயத்தினை மற்றொரு நாணயத்திற்கு மாற்றி, கொடுக்கல்வாங்கல்
இடம்பெற்ற தினத்திலிருந்து இரு வேலை நாட்களிற்குள் தீர்ப்பனவினை
மேற்கொள்ளுமொன்றாகும்.
2. வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல்களை முன்னோக்கி நகர்த்துதல்
தளம்பலடையும் சந்தை நிலைமைகளினால் ஏற்படும் வெளிநாட்டு பரிவர்த்தனை வீத இடர்களை
இழிவளவாக்குவதற்காக பயன்படுத்தப்ப டக்கூடிய மிகப்பொருத்தமான உற்பத்தியொன்றாகும்.
எதிர்காலத்தில் உ டன்பட்டுள்ள திகதியொன்றில் முற்தீர்மானிக்கப்பட்ட பரிவர்த்தனை வீதத்தில்
வெளிநாட்டு நாணயமொன்றின் குறிப்பிட்ட தொகையை வாங்குவதற்கோ அல்லது
விற்பதற்கோவான பி ணைக்கும் கடப்பாடொன்று முன்னோக்கிய வெளிநாட்டு நாணய
பரிவர்த்தனைகளில் காணப்படுகின்றது.
• எதிர்கால வெளிநாட்டு பரிவர்த்தனை செலுத்துகை மற்றும் பெறுகைகளை
எதிர்ப்பார்த்திருக்கும் சேவைநாடுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாவதுடன் முன்னோக்கிய
ஒப்பந்தத்தினை பாதுகாப்பு கருவியொன்றாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
• முன்னோக்கிய வீதம் முன் னோக்கிய பரிவர்த்தனை கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபட்டுள்ள
இரு நாணயங்களின் வட்டி வீத வேறுபாடுகளை கொண்டுள்ளது.
• பெரும்பாலான பெருநிறுவன மற்றும் நிறுவகங்கள் பாதீட்டு பொறிமுறைகளிலான
உள்ளீடாக முன் னோக்கிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட முன்னோக்கிய வீதத்தினை
பயன்படுத்துகின்றன.
• பொருத்தமான பரிவர்த்த னைகளின் கீழான சேவைநாடுநர் ஒருவர் கொடுக்கல்வாங்கல்களை
நிறைவேற்றுவதற்கான ஏ தேனும் ஆவணத் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்யும்
வழியொன்றாக முன் னோக்கிய ஒப்பந்தத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
3. திறைச்சேரி முறிகள்
திறைச்சேரி முறிகள் என்பது ஆரம்ப ஏலங்கள் ஊ டாக இலங்கை மத்திய வங்கியினால்
வெளியிடப்படும் அர சாங்க பிணையமாகும். இவை ஒரு வருட காலத்திற்கும் மேலாக நீளும் முதிர்வு
காலத்துடன் நடுத்தர மற்றும் நீண்டகால முதலீட்டு சாதனங்களாக கருதப்படுகின்றன. முதிர்வு
வரும்படிகள் அர சாங்கத்தினால் உத்தரவாதப்படுத்தப்படுவதனால் பொதுவில் திறைச்சேரி
முறிகளிலான முதலீ டானது பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
முதலீட்டு வீத மானது முதலீட்டு காலம் முழுவதிலும் தொடர்வதாகக் காணப்படுவதுடன்
மேலதிகமாக பி ணையங்களை வாங்குதல் அல்லது விற்றலை அப்போதிருக்கும் சந்தை வீதத்தில்
மேற்கொள்ளக்கூடியதாகவும் காணப்படும். திறைச்சேரி முறிகள் அ ரைவருட கூப்பன்
கொடுப்பனவுகளை கொண்டிருப்பதுடன் ஆரம்பத் தொகையானது முதிர்வின்போது
மீளளிக்கப்படும்.
4. திறைச்சேரி உண்டியல்கள்
திறைச்சேரி உண்டியல்கள் என்பது இலங் கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் மற்றொரு
வகையான அர சாங்க பிணையமாவதுடன் அது இடரற்றதாகவும், பரிமாற்றப்படக்கூடிய
சாதனமாகவும் உரித்து டைமையை எந்நேரத்திலும் மாற்றக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.
இது ஒரு வரு ட காலத்திற்கும் குறைவான முதிர்வு காலத்துடனான குறுகிய கால முதலீட்டு
சாதனமாகக் கருதப்படுகின்றது. திறைச்சேரி முறிகளாக, முதிர்வு வரும்படிகள் அர சாங்கத்தினால்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் தி றைச்சேரி உண்டியல்கள் பாதுகாப்பான முதலீட்டு
சாதனங்களாகக் கருதப்படுகின்றன.
திறைச்சேரி உண்டியல்கள் வி லைக்கழிவுடன் வழங்கப்படுவதுடன் முகப்புப் பெறுமதியானது
முதிர்வின்போது வழங்கப்படுவது டன் வட்டி முன்னிலையில் வழங்கப்படும்.
திறைச்சேரி உண்டியல்கள் மூன்று , ஆறு மற்றும் பன்னி ரெண்டு மாத முதிர்வுக் காலப்பகுதியுடன்
விநியோகிக்கப்படுகின்றன.
முதலீட்டு வீத மானது முதலீட்டு காலம் முழுவதிலும் தொடர்வதாகக் காணப்படுவதுடன்
மேலதிகமாக பி ணையங்களை வாங்குதல் அல்லது விற்றலை அப்போதிருக்கும் சந்தை வீதத்தில்
மேற்கொள்ளக்கூடியதாகவும் காணப்படும்.
5. மீள்கொள்வனவு உடன்படிக் கை (ரெபோ)
முதலீடுகளானவை அரசாங்கத்தின் பிணையங்களினால் பிணைகளாக ஆதாரப்படுத்தப்படுகின்ற
சேவைநாடுநர்களுக்கான இ டரற்ற முதலீட்டு தெரிவொன்றாகும். பெருநிறுவனங்களும்
நிறுவகங்களும் தங்க ளது மிகையான நிதிகளை வினைத்திறனான முறையில் முகாமை செய்ய
இவ்வுற்பத்தியினை பயன்படுத்தலாம்.
இது NDB வங்கிக்கும் ஒரு முதலீட் டாளராக உங்களுக்கும் இடையிலான உடன்படிக்கையாவதுடன்
இங்கு NDB வங்கி ஒப்புக் கொள்ளப்பட்ட வட்டி வீதத்தில் குறிப்பிட்டவொரு காலப்பகுதிக்கு
உங்களிடமுள்ள திறைச்சேரி உண்டியல்கள் அல்லது முறிகளுக்கு எதிராக நிதியினைக் கடன்பெற
உடன்படுகின்றது. உங்களது முதலீட்டுக் கான பிணையாக திறைச்சேரி உண்டியல்கள் அல்லது முறிகள்
உங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்படும்.
6. நேர்மாற்று மீள் கொள்வனவு உடன்படிக்கை (நேர்மாற்று ரெபோ)
அரசாங்க பி ணையங்களில் முதலிட்டப் பகுதியொன்றை நீங்கள் கொண்டிருப்பீர்களாயின் NDB
வங்கியுடன் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல் ஒன்றினுள் நுழைவதன் ஊடாக
அப்பிணையங்களுக்கு எதி ராக குறுகிய கால அடிப்படையில் நீங்கள் நிதிகளை கடன்பெறலாம்.
உடன்படிக்கையானது குறித்து ரைக்கப்பட்ட விலையில் குறித்துரைக்கப்பட்ட எதிர்காலத் திகதியில்
கொள்வனவாளர் அல்லது வாடிக்கையாளரிடமிருந்து பிணையமொன்றை வாங்குவதற்கான
விற்பனையாளரின் அல்லது விநி யோகத்தரின் அர்ப்பணிப்புடன் எட்டப்படுகின்றது.
இவ்வுடன்படிக்கையினை வாடிக்கையாளரின் நோக்கிலிருந்து எட்டுகின்றபோது அது நேர்மாற்று
மீள்கொள்வனவு என குறிப்பி டப்படும்.
இது பெருநிறுவனங்கள் மற்றும் நிறுவகங்களுக்கு பயனுள்ள உற்பத்தியொன்றாவதுடன் அதனை
நாளாந்த திரவத்தன் மையை முகாமை செய்வதற்கு பயன்படுத்தலாம். மேலும் மிகைவரைவு
வசதியுடன் ஒப்பிடுகையில், தங்களது காசு தேவைப்பாடுகளுக்கு நிதிவழங்க நேர்மாற்று
மீள்கொள்வனவு உற்பத்தியி னைப் பயன்படுத்தும் சேவைநாடுநர்கள் குறுகிய கால நிதிகளை
கடன்பெறுவதில் சாதகமான வீதங்களை அனுபவிக்கலாம்.
7. செல்லுபடியாகும் நியதிகளும் நிய மங்களும்.
உற்பத்தி தகவல்கள் மற்றும் நியதிகள் மற்றும் நியமங்கள் என்ப வை காலத்திலான மாற்றத்திற்கு
உட்பட்டவையாகும். அதன்பொருட்டு, சமீபத்திய தகவல்கள் மற்றும் தற் போதிருக்கின்ற நியதிகள்
மற்றும் நியமங்க ளை அறிந்துக்கொள்ள உங்களுக்கு அருகிலுள்ள கிளையை தொடர்புகொள்ள
அறிவுறுத்தப்படுகின்றது.