எங்கள் பணி
நிதி வலிமையடைந்த இலங்கைக்கான இயக்க சக்தி..
எங்கள் தொள்மை
நிதி சேவைத் துறையில் முன்னணி ஊக்கியாக இருந்து, பங்குதாரர்களுக்கு உயர்ந்த மதிப்பை உருவாக்கி, புதுமையான நிதி தீர்வுகள் மூலம் தனிநபர்களை வலுப்படுத்தி, தேசிய முன்னேற்றத்திற்கு பங்களிப்பது. சிறப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஊக்கமுள்ள குழுவினால் இது எட்டப்படுகிறது..
எங்கள் மதிப்புகள்
நேர்மை
மிகக் கடினமான சூழல்களிலும் நியாயமானதும் ஒழுக்கமானதுமான நிலையில், எப்போதும் நேர்மையும், உண்மையும், மனமாறாத உணர்வையும் காப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாங்கள் சொல்வதைச் செய்வதன் மூலம், எங்கள் நடத்தைகளை எங்கள் சொற்களுடன் பொருந்தச் செய்வதன் மூலம், எங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்பதன் மூலம் நம்பிக்கையை ஊக்குவிப்போம்.
புதுமை
சாதாரணத்தைத் தாண்டி செல்வதற்கான விருப்பம், நிலையான நிலையைச் சவால் செய்வது மற்றும் எங்கள் பங்குதாரர்களுக்கான புதிய பார்வைகளை வடிவமைப்பது ஆகியவற்றால் நாங்கள் இயக்கப்படுகிறோம். எங்கள் சிந்தனையில் புதுமையுடனும், எங்கள் அணுகுமுறையில் எதிர்காலத்தை நோக்கியதுமாகவும் இருக்கிறோம் – எங்கள் பங்குதாரர்களுக்கெல்லாம் ஒப்பற்ற மதிப்பை வழங்கும் இறுதி குறிக்கோளை நோக்கி செயல்படுகிறோம்.
சிறப்பு
நாங்கள் வாக்களித்ததை அக்கறையுடன் நிறைவேற்றும் சரியான மனப்பாங்கைக் கொண்டுள்ளோம், மேலும் எதிர்பார்ப்பதைவிட அதிக மதிப்பை சேர்க்கிறோம். புதுமை, நிபுணத்துவம், முழுமைத்தன்மை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் மூலம் நாம் செய்யும் அனைத்திலும் சிறப்பை அடைகிறோம்.
உண்மைத்தன்மை
எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் உண்மைத்தன்மை அடிப்படையில் பயனுள்ள, நீண்டகால உறவுகளை உருவாக்க நாங்கள் நம்புகிறோம். ஒருவருக்கொருவர் காட்டும் உண்மைத்தன்மை நாங்கள் சேர்ந்து அடையும் சாதனைகளுக்கு இணையாக மதிப்புமிக்கது என நாங்கள் கருதுகிறோம்.
பொறுப்புணர்வு
நாங்கள் செய்யும் அனைத்திலும் பொறுப்புணர்வுடனும், வெளிப்படையாகவும், கணக்குப்படுத்தப்பட்டவாராகவும் இருக்கிறோம். எங்கள் பங்குதாரர்களை பாதிக்கும் எங்கள் செயல்களுக்கு உரிமையுடன் பொறுப்பேற்கும் மனப்பான்மை எங்கள் நிறுவனத் திட்டத்தை வடிவமைக்கிறது.
நம்பகத்தன்மை
எங்கள் அனைத்து பங்குதாரர்களிடமும் நாங்கள் நம்பகமானவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருப்போம். எங்கள் அனைத்து சேவைகளிலும் எங்கள் செயல்திறனில் தொடர்ச்சியான நிலைப்பாட்டை அடைவதற்கு நாங்கள் பாடுபடுகிறோம்.