எப்போதும் உங்கள் திருப்திக்கு ஏற்ப சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறோம்.
முறைப்பாடு கையாளும் செயல்முறை
எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் எதிர்பார்ப்புகளை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் நிதிச் சேவைகளை வழங்குவதில் நாம் உறுதியாக அர்ப்பணித்துள்ளோம்.
உங்கள் கருத்துக்கள், அவை முறைப்பாடு,பிரச்சினை, பாராட்டு அல்லது பரிந்துரை எதுவாக இருந்தாலும், நாம் உங்களுக்கு எவ்வளவு திறம்பட சேவையளிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, எங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் துணைபுரிகின்றன. எங்களின் நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளும் மிக உயர்ந்த முன்னுரிமையுடன் கையாளப்படுகின்றன. அவை நியாயமான முறையில், வெளிப்படைத்தன்மையுடன், இரகசியத்தன்மையைப் பேணியவாறு மற்றும் எவ்வித பாகுபாடுமின்றி பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. இதில் விசேட தேவைகள் கொண்ட வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளும் அடங்கும். மேலும், கிளை மட்டத்தில் வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கையாள்வதற்காக கிளை முகாமையாளர்கள் மற்றும் உதவி முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் விருப்பத்திற்குரிய மொழியில் (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ்) உங்களுடன் தொடர்பு கொள்ள நாம் முயற்சிப்போம்.
உங்கள் கருத்துக்கள் அல்லது முறைப்பாடுகளை எவ்வாறு பகிரலாம்?
பின்வரும் வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் உங்கள் கருத்து அல்லது முறைப்பாட்டை எங்களிடம் சமர்ப்பிக்கலாம்:
- உங்களுக்கு அண்மையுள்ள NDB கிளைக்குச் சென்று, கிளை முகாமையாளர் / உதவி முகாமையாளர் அல்லது உறவு முகாமையாளருடன் (Relationship Manager) தொடர்புகொள்ளவும்.
- எங்களின் 24/7 தொடர்பு மையத்தை +94 (0) 11 7448888 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொள்ளவும்.
- எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: contact@ndbbank.com
- அஞ்சல் மூலம் எழுதவும்: The Customer Experience Officer, National Development Bank PLC, No. 92, Bernard Soysa Mawatha, Colombo 05.
- இவ்வலைப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இணையவழி (Online) படிவத்தின் மூலம் உங்கள் முறைப்பாட்டை சமர்ப்பிக்கவும்.
உங்கள் முறைப்பாட்டைதிறம்பட செயல்படுத்தி தீர்வு வழங்க எங்களுக்கு உதவுவதற்காக, உங்கள் அடையாள மற்றும் தொடர்பு விபரங்கள் உட்பட துல்லியமான, முழுமையான மற்றும் தற்போதைய நிலைக்கேற்ப தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தத் தகவல்கள் உங்கள் முறைப்பாட்டை பதிவு செய்யவும், கண்காணிக்கவும், விசாரணை மேற்கொள்ளவும் மற்றும் திறம்பட தீர்வு காணவும் எங்களுக்கு உதவும். உங்கள் முறைப்பாட்டை முதலில் வங்கியின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதனை விசாரித்து தீர்வு காண்பதற்கான நியாயமான கால அவகாசத்தை எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதற்குப் பின்னரும் முடிவு அல்லது உங்கள் முறைப்பாடுகையாளப்பட்ட விதம் குறித்து நீங்கள் திருப்தியடையாவிட்டால், இலங்கை மத்திய வங்கி அல்லது இலங்கையின் நிதி ஒம்புட்ஸ்மன் போன்ற முறைப்பாடு தீர்வு அமைப்புகளின் ஊடாக விடையத்தை மேன்முறையீடு செய்யலாம்.
நாங்கள் எவ்வாறு பதிலளிக்கிறோம்?
உங்கள் முறைப்பாடு கிடைத்தவுடன், அது வங்கியின் முறைப்பாட்டு கண்காணிப்பு முறைமையில் (Complaint Tracking System - CSRM) பதிவு செய்யப்பட்டு, அதற்கு தனித்துவமான குறிப்பு இலக்கம் (Reference Number) வழங்கப்படும். பின்னர், உடனடி கவனம் மற்றும் தீர்விற்காக அந்தப் புகார் சம்பந்தப்பட்ட கிளை அல்லது துறைக்கு அனுப்பப்படும்.
உங்கள் முறைப்பாடு அல்லது பிரச்சினை பெறப்பட்டமைக்கான உறுதிப்படுத்தலாக, முறைப்பாட்டு குறிப்பு இலக்கம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
உங்கள் முறைப்பாட்டைவிசாரித்து தீர்வு வழங்குவதற்கும், ஐந்து (5) வேலை நாட்களுக்குள் பதிலளிப்பதற்கும் எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முறைப்பாட்டின் தன்மை அல்லது சிக்கலான தன்மை காரணமாக கூடுதல் காலம் தேவைப்பட்டால், அதன் முன்னேற்றம் குறித்து உங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படும். மேலும், தீர்விற்கான மதிப்பிடப்பட்ட கால அவகாசமும் அறிவிக்கப்படும்.
உங்கள் முறைப்பாட்டின் முடிவு, எங்களின் பதில் அல்லது உங்கள் முறைப்பாடு கையாளப்பட்ட விதம் குறித்து நீங்கள் முழுமையாக திருப்தியடையாவிட்டால், இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் (Financial Consumer Relations Department) அல்லது இலங்கையின் நிதி ஒம்புட்ஸ்மன் அலுவலகம் நிர்வகிக்கும் முறைப்பாடு தீர்வு நடைமுறைகள் மூலம் விடயத்தை மேன்முறையீடு செய்யலாம்.
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் (FCRD)
அஞ்சல் முகவரி:
Financial Consumer Relations Department,
No. 30, Janadhipathi Mawatha,
Colombo 01.
விசாரணைகளுக்கான உதவி இலக்கம்: 1935
தொலைபேசி: +94 112 477 966
தொலைநகல்: +94 112 477 744
மின்னஞ்சல்: fcrd@cbsl.lk
இலங்கையின் நிதி ஒம்புட்ஸ்மன் அலுவலகம்
The Financial Ombudsman
Office of the Financial Ombudsman
No. 01, Bethesda Place, Milagiriya,
Colombo - 05.
தொடர்பு இலக்கம்: +94 11 259 5624
தொலைபேசி / தொலைநகல்: +94 11 259 5625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையதளம்: www.financialombudsman.lk
இறுதியாக திருத்தப்பட்ட தேதி: 27.07.2026