பொழுதுபோக்கு
NDB முன்னுரிமை வங்கிச்சேவையானது நிதிசார் சேவைகளது எல்லைகளுக்கும் அப்பாலானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பொழுதுபோக்குகள், விளையாட்டுகளை தொடரவும் அல்லது உங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்குமான வாழ்க்கைமுறை மற்றும் ஓய்வுநேர வாய்ப்புகளை வழங்குகின்றது. உங்களது முன்னுரிமை விசா டெபிட் அட்டை கொடுப்பனவு நுழைவாயில் மற்றும் ATM ஊடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களது பணத்துக்கான அணுகலை வழங்கும் அதேவேளை விசேட சலுகைகள் மற்றும் கொடுப்பனவுத் திட்டங்களது நன்மைகளுடன் மேலதிக பயணங்கள் அல்லது தனிப்பட்ட செலவீனங்களை வளப்படுத்துகின்ற NDB கடனட்டைகளுக்கும் நீங்கள் உரித்துடையராவீர்கள். NDB கடனட்டைகள் முன்னுரிமை வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு முன்னனுமதிக்கப்பட்ட ஒன்றாவதுடன் அது கோரிக்கையின் பேரில் வழங்கப்பெறும்.
வியாபார வங்கிச்சேவை
முன்னுரிமை வங்கிச்சேவை என்பது தனிநபர்களுக்கும் வியாபாரங்களுக்குமாக வழங்கப்படுகின்ற சேவையாகும். NDB வங்கியின் அத்தகைய கணக்கு உடைமையாளர்களுக்கு வியாபார அபிவிருத்திக்காக அபரிதமான உதவிகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் விரும்புகின்ற வங்கிச்சேவை விகிதங்களில் நன்மைகளைப் பெறுவதுடன் பெரும்பாலான சேவை கட்டணங்களிலிருந்து விலக்குகளையும் பெறலாம். முன்னுரிமை வங்கிச்சேவை அடுக்குகள் தனிநபர், வியாபார மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பல்வேறு நன்மைகளையும் உங்களது தேவைகளுக்கு பொருந்துகின்றவாறு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான வங்கிச்சேவை கட்டமைப்பினையும் வழங்குகின்றது.
நிதி ஆலோசனைகள்
உங்களது உறவுகள் முகாமையாளர் நிதிச் சந்தைகள், முதலீட்டு உற்பத்திகள் மற்றும் மேலதிக பெறுமதிகளை வழங்கும் முன்னுரிமையளிக்கப்பட்ட சேவைகளில் அறிவுடையவராக காணப்படுகின்றார். முதலீட்டு வழிகாட்டல்கள் மற்றும் நிதி ஆலோசனைகள் என்பன வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட அவாக்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும். நம்பிக்கைக்கொள்ளக்கூடிய நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தினை அனுமதிக்கும் புரிந்துணர்வு மற்றும் நேர்க்கணிய மனப்பாங்குடன் உங்களது நிதி இலக்குகள் இணைவதாகின்றன.
உறவுகள் முகாமையாளர்
நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறனான பதில் வழங்கல்களை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கும் ஒரு அர்ப்பணிப்புமிக்க உறவுகள் முகாமையாளர் குறித்தொதுக்கப்பட்டுள்ளார். இத்தனிப்பட்ட வெளியானது ஒவ்வொரு வாடிக்கையாளருடனுமான உறவுகளுக்கு உதவுவதுடன் முக்கியமான நிதி கருத்துக்களில் ஈடுபடும்போது வினைத்திறனானதாக காணப்படுகின்றது அத்துடன் அசாத்தியமான பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களை உருவாக்கி உங்களது வங்கிச்சேவை அனுபவத்தினை தனிப்பட்டதாக்குகின்றது. இது பரஸ்பர நம்பிக்கை மற்றும் நிதிசார் பங்காளராக NDB வங்கியை புரிந்துக்கொள்வதன் பெறுபேறாகின்றது.