ஒவ்வொரு படியும் ஒரு சாதனையே, முழுப் பயணத்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
என்டிபி பிரிவிலேஜ் செலக்ட் (NDB Privilege Select) என்பது இலங்கையின் தனியார் வங்கித் துறையில் ஒரு முத்திரையாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான தனித்துவமான நிலை அடிப்படையிலான வங்கி சேவையாகவும் உள்ளது. சாதனைகள் திறமையுடன் பாராட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம், நேரம் மதிப்புமிக்கது என்பதை நாங்கள் உணர்கிறோம், மேலும் முடிவுகள் திடீரென எடுக்கப்படலாம். வாழ்க்கை முறைகள் ஆதரிக்கப்பட வேண்டும், தொழில்முறை தேவைகள் எளிதாக்கப்பட வேண்டும், நிதி பங்குதாரர்களாக நாங்கள் நிதி வலிமையும் நீடித்த வளமையும் உருவாக்க தயாராக உள்ளோம்.
தனித்துவமான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் செல்வ உருவாக்க கருவிகள் உட்பட நாங்கள் பரந்த அளவிலான நிதி சேவைகளை வழங்குகிறோம். நிதி ஆலோசனையில் அறிவார்ந்ததும் திறமையானதுமான தனிப்பட்ட தொடர்பு மேலாளர் (Relationship Manager) ஒருவர் உங்களின் அர்ப்பணிப்பை நிறைவு செய்யச் சிறந்த விருப்பங்களை வழங்க நியமிக்கப்படுகிறார்; இது ரகசியத்தன்மையை பாதுகாக்கவும், தனித்துவத்தைக் காக்கவும் உதவுகிறது. அவர்களின் ஒரே கவனம் உங்கள் நிதி இலக்குகள் நிறைவேறுவதை உறுதி செய்வது, உங்கள் முதலீடுகள் வலுவானவையாக இருப்பது, உங்கள் நிதி பரிமாணம் முழு திறனுடன் செயல்படுவது, மேலும் உங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு பலன் தருவதாகும். இவை அனைத்தும் தனிப்பட்ட அல்லது மின்னணு தொடர்பின் மூலம் நடைமுறையில் அமையும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரிவிலேஜ் வங்கி மாடி (Privilege Banking floor) உள்ளது. இது தனியுரிமையுடன் கூடிய அழகிய மற்றும் வசதியான சூழலை உருவாக்குகிறது; அதில் கூட்ட அறைகள், முன்னுரிமை செயலாக்க வசதிகள் மற்றும் பிற வணிக வசதிகள் உள்ளன. இவை அனைத்தும் வணிக வங்கித் தொடர்பான பணிகள் தளர்வின்றி முன்னேறுவதைக் காக்கின்றன.
உறவுகள் வங்கிச்சேவை
NDB இல் பரஸ்பர மதிப்பு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் உறவுகளில் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். தனிநபர்களின் தேவைகளுக்கு பொருந்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள பொருத்தமான நிதிசார் தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். உங்களது தேவைகளது அந்தரங்கமான மதிப்பாய்வு மற்றும் உங்களது நிதிசார் இலக்குகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அதற்கான சிறந்த அணுகுமுறையை பிரத்தியேகமான உறவுகள் முகாமையாளர் உங்களுக்கு வழங்குவார்.
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நாணயங்களில் பொறுப்பு உற்பத்திகள்
வெளிநாட்டு மற்றும் உள்ளுர் நாணயங்கள் - சேமிப்பு, நடைமுறைக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள்.
சொத்து உற்பத்திகள்
• வீடு/வீடமைப்புக் கடன்
• வாகன குத்தகைகள், கடன்கள் மற்றும் வாடகைகொள்வனவுகள்
• NDB வெல்த் பரஸ்பர நிதியத்திலிருந்து விசேட வசதிகள்.
உலகம் முழுவதிலுமான அணுகல்
NDB பிரிவிலேஜ் செலக்ட் உறுப்பினர் ஒருவராகிய உங்களது நிதிசார் வெளிப்பாடுகளில் விசா டெபிட் மற்றும் கடனட்டைகள் ஒரு அங்கமாகக் காணப்படுகின்றன. அவை உள்ளுர் மற்றும் உலகளாவிய ATMகளில் செல்லுபடியானதாகவும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றன. மேலதிகமாக, சிறப்பு ஹோட்டல்களில் கடனட்டைகளுக்கான விசேட சலுகைகள் மற்றும் பிரயாண முன்னுரிமைகள் என்பனவும் பகிரப்பட்டுள்ளன. தங்களுடைய வெளிநாட்டுப் பயணங்களிலான செலவுகளுக்கு எல்லைகளை அமைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கென விசா டிராவலர்ஸ் அட்டை காணப்படுவதுடன் அவ்வட்டை செலவு எல்லைகள் குறித்த உயர்தர அறிவுடன் பாதுகாப்பினையும் அமைதியான மனநிலையையும் வழங்குகின்றது.
பொழுதுபோக்கு உலகம்
தனித்துவமானதும் சிறப்பானதுமான பொழுதுபோக்கு வாய்ப்புகளை உங்களுக்கு கொணருவதன் வாயிலாக உங்களது செல்வத்துக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒரு பெறுமதியினை NDB பிரிவிலேஜ் செலக்ட் சேர்க்கின்றது. முன்னுரிமைப்பெற்ற குடும்பமொன்றின் அங்கமாக உணவு, சினிமா, இசை அல்லது விசேட நிகழ்வுகளுக்கான சலுகைகளை அனுபவிப்பதன் நன்மையொன்றாக நிதிப் பாதுகாப்பின் பகுதியொன்று காணப்படுகின்றது. எமது அணியானது பல்லடுக்கு முன்னுரிமை வங்கிச்சேவை வாடிக்கையாளருக்கு ஆர்வமிகு சமூக செயற்பாடுகளை தொடர்ச்சியாக பரிந்துரைக்கின்றது.
பரஸ்பர நிதிகள் - வெல்த் மெனெஜ்மென்ட் உற்பத்திகள்
• கில்ட் எட்ஜ் நிதியம்
• பேங்கஸ்ஸுரன்ஸ் உற்பத்திகள்
• வருமான மற்றும் வளர்ச்சி நிதியம்
• வருமான நிதியம்
• காப்புறுதி
• வளர்ச்சி நிதியம்
காப்புறுதி மற்றும் பாதுகாப்பு
இலங்கையில் புத்தாக்க காப்புறுதி கொள்கைகள் ஊடாக செல்வங்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் கூட்டிணையாக NDB மற்றும் AIA ஸ்ரீலங்கா என்பன வங்கிக்காப்புறுதி தீர்வுகளில் முன்னோடியாகக் காணப்படுகின்றன. இது செல்வங்களின் காப்புறுதித் தீர்வுகளுக்கு AIA காப்புறுதியினை சிறந்த தெரிவாக மாற்றியுள்ளது. AIA மிகப்பெரியதாகவும், சுயாதீனமானதாகவும், வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ள பேன்-ஏசியா லைப் இன்சூரன்ஸ் குழுமமாகவும் காணப்படும் அதன் மதிப்பிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களது நற்பெயருக்கு மேலும் ஒரு சிறப்பாக தற்போது சந்தை மூலதனப்படுத்தலில் உச்சத்தில் பட்டியலிடப்பட்டுள்ள காப்புறுதிதாரர்களாக காணப்படுகின்றார்கள்.
ஏவியா சிங்கப்பூர் மற்றும் சுவிஸ் லைப் சிங்கப்பூர் ஊடாக உலகளாவிய சுகாதார காப்புறுதிகளை வழங்குவதற்காக சேனாரத்னே அசோசியேட்ஸ் உடன் பங்குதாரராகியதில் NDB பெருமைகொள்கின்றது. இவ்வுலகளாவிய சுகாதார காப்புறுதிச் சேவையானது தீவிர நோய்களுக்கான சிகிச்கைள் முதல் கர்ப்பம் மற்றும் தாய்மைப்பேறு வரையில் பரந்துபடும் முழுதளாவிய மருத்துவ சிகிச்சைகளை உள்ளடக்குகின்றது. இக்காப்புறுதிதாரர்கள் காப்புறுதிபெறுபவர்களின் தேவைகளுக்குப் பொருந்துகின்ற சிறப்பான உள்ளுர் மற்றும் உலகளாவிய உள்ளடக்கங்களை வழங்குகின்றார்கள்.
வெல்த் மெனெஜ்மென்ட்
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை சொத்து முகாமைத்துவ கம்பெனியாக NDB வெல்த் மெனெஜ்மென்ட் காணப்படுகின்றது. முதலீட்டாளர்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய உற்பத்திகளின் தெரிவுகளை முதிர்ச்சியுடைய முதலீட்டாளர்களுக்கு இம்மேடை வழங்குகின்றது. வெல்த் மெனெஜ்மென்ட் உற்பத்திகள் மரபுரீதியற்ற வட்டி வருமானங்களுடன் பரந்துபட்ட முதலீட்டு வாய்ப்புகளாக காணப்படுகின்றன. உங்களது உறவுகள் அதிகாரியுடனான தனிப்பட்ட ஆலோசனை உங்களுக்குப் பொருந்துகின்ற நிதியங்களின் மட்டங்கள் மற்றும் வகைகளை வழங்கும்.
பங்கு வாணிபம்
NDB ஸ்டொக்புரோக்கர்ஸ் (தனியார்) லிமிடெட் (NDBS) என்பது கொழும்பு பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்டுள்ள உரிமம்பெற்ற பங்குத்தரகராக NDB வங்கிக்கு முழு உரித்துடைய துணைநிறுவனமாகும். இச்சேவையானது வங்கிச்சேவையுடனான மற்றும் வங்கிச்சேவையற்ற வாடிக்கையாளர்களுக்கு சந்தை நிலவரங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அர்ப்பணிக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக, விளிம்பு வர்த்தகம், நிகழ்நிலை வர்த்தகம் அதேப்போன்று அலகு நம்பிக்கை உற்பத்திகள் உள்ளடங்கலாக பரந்தளவிலான உற்பத்திகளுக்கு முதலீட்டு ஆலோசனைகளையும் வழங்குகின்றது.
முதலீட்டு உற்பத்திகள்
• மூலதனம் உத்தரவாதப்படுத்தப்பட்ட உற்பத்திகள்
• அசைவற்ற ஆதன முதலீட்டு நிதியம் (REIT)
• பண்டமாற்று (ETF)
• உட்கட்டுமான நிதியங்கள்
• துணிகர முதலீடுகள்
முதலீட்டு வங்கிச்சேவை
NDB வங்கி அதனது சொந்த துனைநிறுவனமான NDB முதலீட்டு வங்கி லிமிடெட் (NDBIB) ஊடாக மாற்று முதலீட்டு முன்னுரிமைகளை கொணர்கின்றது. உங்களது செல்வ முகாமைத்துவமானது தனியார் பங்கு வைப்பு மற்றும் கடன் கருவிகள் ஊடாக வளப்படுத்தப்படும். உங்களது உறவுகள் முகாமையாளர் இது குறித்த அனைத்து விசாரணைகளுக்கும் உதவுவதுடன் ஈடுபாடுடைய செல்வ முகாமைத்துவ வாடிக்கையாளரொருவர் ஆகுவதற்கான செயன்முறை ஊடாக உங்களை வழிநடாத்துவார்.
வாடிக்கையாளர் சேவைகள்
• உறவுகள் முகாமையாளர்
• ஆலோசனை சேவைகள்
• வங்கிச்சேவைகள் மற்றும் உறவுகள் முகாமையாளருக்கான 24 மணித்தியால அணுகல்
• தீர்வைகள்
• அனைத்து வங்கிச்சேவை உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்குமான விருப்பத்திற்குரிய தீர்வைகள்
கட்டமைக்கப்பட்ட உற்பத்திகள்
• வெளிநாட்டு நாணயங்களில் இரட்டை நாணய வைப்புகள் (DCD)
• விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்பு கணக்குகள் (SFIDA வைப்புகள்)
• உள்ளுர் நாணயத்தில் வர்த்தகப் பத்திர வீதம்
• திறைச்சேரி உண்டியல்கள் மற்றும் முறிகள்