NDB Privilege Select Plus
Attitude equals altitude - sky is the limit with NDB Privilege Select Plus. A dedicated personalized account with features to streamline your financial needs.
சிலெக்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கான சுயாதீன சலுகைகள்
உறவுகள் முகாமையாளர்
சந்தை வாய்ப்புகள், முதலீடுகள் மற்றும் நிதிசார் திட்டமிடல்களில் நிபுணத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்புமிக்க உறவுகள் முகாமையாளர் ஒருவர் உங்களது நிதி ஆர்வங்களுக்கு உதவ உங்களது கோவைக்கென ஒதுக்கப்படுவார்.
நிதிசார் ஆலோசனை சேவைகள்
செலக்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு எமது துணைநிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கூட்டாக எண்ணிறந்த ஆலோசனை சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. பங்குச் சந்தைகள், முதலீட்டு வங்கிச்சேவை மற்றும் வெல்த் மெனெஜ்மென்ட் என்பவற்றை இவை உள்ளடக்குகின்றன. இது வியாபாரக் கடன், தற்காலிக மிகையான மீளப்பெறல் மற்றும் அந்நிய செலாவணி வாய்ப்புகள் போன்றவற்றை வளப்படுத்தும் தொழிற்சார் உயரளவை மற்றும் கீழளவை முதலீடுகளையும் உள்ளடக்கியதாகும்.
குடும்ப வங்கிச்சேவை
செலக்ட் பிளஸின் முன்னுரிமைகளைப் பகிர்ந்துக்கொள்ள உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்குவதில் நாம் பெருமைக்கொள்கின்றோம். உங்களது குடும்பத்தினரின் வெற்றியும் சௌகரியமுமே எங்களுக்கு முக்கியமானதாகும். உங்களது குடும்பத்தினரை எமது முன்னுரிமை வலையமைப்பிற்குள் வரவேற்பதுடன் அவர்களை அதன் அனைத்து நன்மைகளையும் அணுகவும் உள்ளடக்குகின்றோம்.
விருப்பத்துக்குரிய வங்கிச்சேவை முன்னுரிமைகள்
முதலீடுகளின் விருப்பத்துக்குரிய வீதங்கள்
முதலீடுகள் என வரும் போது NDB வங்கியின் செலக்ட் பிளஸ் உடன் நீங்கள் உச்ச நன்மைகளுக்கு தகுதியானவர்கள் என்பதனை NDB வங்கி அங்கீகரித்துள்ளது. அதன் காரணமாக, உங்களுக்கு பன்மடங்கான வருமானத்தை உறுதிப்படுத்துவதற்காக விருப்பத்துக்குரிய சிறப்பான வீதங்களுடன் தனித்துவமான நிதிசார் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
விருப்பத்துக்குரிய தீர்வைகள்
முன்னுரிமைப்பெற்ற வாடிக்கையாளர் ஒருவராக, உங்களது அனைத்து பரிவர்த்தனைகளும் செயற்படுத்துவதற்கான மிக விரும்பமானத் தீர்வைகளைப் பெற்றுக்கொள்ளும் என்பதுடன் நிதி செயன்முறைப்படுத்தல்கள் எனவரும்போது முன்னுரிமைக்கும் மதிப்பளிக்கப்படும்.
உலகளாவிய அணுகலைக் கொண்ட கடன் மற்றும் டெபிட் அட்டைகள் (முன்னுரிமை அட்டைகள்)
முன்னுரிமை நுழைவு அட்டைகளுடனான (விமானநிலைய அணுகல்) NDB விசா இன்பினைட் அட்டை செலக்ட் பிளஸ் கணக்குடைமையாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றது. இது பிரயாண காப்புறுதி, இணைய அணுகல்/NEOS மொபைல் வங்கிச்சேவை மற்றும் பரிவர்த்தனைகளுக்கான 3D பாதுகாப்பு வெளி என்பவற்றையும் உள்ளடக்குகின்றது.
வளப்படுத்தப்பட்ட கடன்வழங்கல் வசதிகள்
NDB செலக்ட் பிளஸ் உறுப்பினர் ஒருவராக, உங்களது தேவைகளுக்கு பொருந்துகின்ற கடன்வழங்கல் வசதிகளை நாம் ஏற்றுக்கொள்வோம். சில பொது அடுக்குகள் தனித்துவமான நிதிசார் கேள்விகளை கொண்டுள்ளன என்பதனை நாம் அறிந்துள்ளதுடன் உறுப்பினர் முன்னுரிமைகளின் ஒரு பகுதியாக உங்களது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்திக்கவும் நாம் முயற்சிக்கின்றோம்.
மரணச்சொத்து ஆலோசனை மற்றும் உயில்பேறு திட்டமிடல்கள்
முதலீட்டு திட்டமிடலென்பது பணி ஓய்வின்போதும் அதற்கப்பாலும் உங்களதும் உங்களது குடும்பத்தினரதும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான வழியொன்றாகும். செலக்ட் பிளஸ் வட்டத்தினருக்கு பெறுமதியொன்றை சேர்ப்பதாக, எமது நிதி பங்காளர்களுடன் இணைந்து நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான உயில்பேறு ஆலோசனை மற்றும் முதலீ்ட்டு வாய்ப்புகளை வழங்கின்றோம். உங்களது செல்வத்தினை பாதுகாக்கவும் வளர்க்கவும் இயலச்செய்து, எந்தவொரு சமரசங்களுமின்றி நீங்கள் விரும்பிய வாழ்வை வாழ உதவி, உங்களது உயில்பேறினை முற்கூட்டியே திட்டமிட நாம் உதவுகின்றோம்.
பிரத்தியேக செய்தித்தாள்
செய்தித்தாள் NDB வங்கி ஈடுபாடு கொண்டுள்ள செய்திகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த அம்சங்களால் எமது மதிப்பிற்குரிய முன்னுரிமை வலையமைப்பிற்கு பெறுமதிகளை சேர்க்கின்றது. பொறுப்புவாய்ந்த பெருநிறுவனமொன்றாக, தரநியமங்களையும் தொழிற்சார் பெறுமதிகளையும் உயர்த்துவதற்காக சமுதாயங்கள் மீதான எமது ஈடுபாடுகளை நாம் தொடர்ச்சியாக தரமுயர்த்துகின்றோம். இதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதன் ஊடாக, உங்களையும் எம்முடைய நல்லெண்ணத்தினதும் சமூக பொறுப்புமிக்க செயற்பாடுகளினதும் அங்கமொன்றாக்குகின்றோம். இது வங்கியுடனான உங்களது உறவுகளையும் தனிப்பட்டதாக்கி வளப்படுத்துகின்றது.
பரோபகார சேவைகள்
சமூக பொறுப்புமிக்க பெருநிறுவனமொன்றாக, NDB வங்கி நன்கொடைகள், சமூகமாக வளப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் சூழலுக்கு நல்லதான விடயங்கள் குறித்த வாதங்களுக்கான உங்களது முயற்சிகளை மதிக்கின்றது. அதன்காரணமாக, உங்களுடன் அத்தகைய செயற்றிட்டங்களின் அங்கமொன்றாகுவதற்கு எமது நேரத்தையும் முயற்சிகளையும் நாமாக வழங்குகின்றோம்.
காப்புறுதி சேவைகள்
நாம் ஏலவே அனுமதித்துள்ள ஒருமைப்பாட்டுடன் வருகின்ற எமது சர்வதேச பங்குதாரர்கள் ஊடாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சுகாதார மற்றும் ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை உங்களுக்கு நாம் வழங்குகின்றோம்.
உயர்தர பிரத்தியேக உதவி சேவைகள்
பிரத்தியேக உதவி சேவைகள் உங்களது வாழ்க்கைமுறைத் தேவைப்பாடுகளுக்கான உதவியாளராக காணப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூக்கள், பரிசுகள், கேக் மற்றும் சொக்கலேட் வழங்கல்கள், உணவுவிடுதி முன்பதிவுகள், உலகளாவிய வளங்கள் மற்றும் எல்லையற்ற பிரயாண உதவிகள் (உள்ளுர் மற்றும் வெளிநாடுகள்) தனிப்பட்ட கொள்வனவு உதவிகள் உள்ளடங்கலாக மிகச்சிறப்பான வாழ்க்கைமுறைக்கு நீங்கள் உரித்துடையவராவீர்கள்.c