“NDB பிக்ஸல்” உடன் வானளாவ உயர்ந்திடுங்கள். எதிர்காலத்திற்கு தயாரான இளைஞர்களை வலுப்படுத்த NDB இன் நவீன டிஜிட்டல் முதற்தீர்வாகவும்.
NDB பிக்ஸல்
வானளாவ உயர்ந்திடுங்கள் – எதிர்காலத்திற்கு தயாரான இளைஞர்களை வலுப்படுத்தும் NDB இன் நவீன டிஜிட்டல் தீர்வு.
NDB பிக்ஸல் டீன் கணக்கானது சேமிப்புக் கணக்குகளுக்கும் அப்பாற்பட்டதாகும். நிதிசார் பெறுப்புடைமை, சேமிப்புகள், மற்றும் திறன்மிகு செலவு பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தினை கற்றுக்கொள்ள இளைஞர்களுக்கு இதுவொரு முதற்படியாகும்.
தகுதி நிலைகள்:
- 13 முதல் 18 வயதிற்குட்பட்ட இலங்கையின் வதியும் பராயமடையாதவர்கள்.
- வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் (குடியேறியோர் தவிர்த்து).
ஆரம்ப வைப்பு:
குறைந்தபட்ச வைப்பு: ரூபா. 5,000
நன்மைகள்:
- பராயமடையாதவர்களுக்கான டெபிட் அட்டை
- நாளாந்த பரிவர்த்தனை எல்லைகள்:
- POS: ரூபா. 20,000
- ATM பணமீளப்பெறல்: ரூபா. 20,000
- டெபிட் அட்டை விநியோகம் பெற்றோர்/பாதுகாவலரின் அனுமதியை தேவைப்படுத்துகின்றது.
- பராயமடையாதவர்களுக்கான NEOs மொபைல் வங்கிச்சேவை:
- பொதுப் பரிவர்த்தனைகள்: ரூபா. 20,000
- விலைச்சிட்டை கொடுப்பனவு: ரூபா. 20,000
- நிகழ்நிலை கொடுப்பனவு: ரூபா. 20,000
- பாதுகாவலருக்கு இ-கூற்றுகள் மற்றும் குறுஞ்செயதி அறிவித்தல்கள் (அனைத்து பரிவர்த்தனைகளுக்குமான அறிவித்தல்கள் பெற்றோர் /பாதுகாவலரின் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும்).
டிஜிட்டல் பரிவர்த்தனை இயலுமை:
பராயமடையாதவரின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெற்றோர் /பாதுகாவலரின் ஒப்புதலுக்கு உட்பட்டவையாகும். பெற்றோர்/பாதுகாவலரின் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மாத்திரமே அணுகல் வழங்கப்படும்.