சூரிய சக்திக்கான கடன்கள்

இல்லங்களுக்கான சூரியசக்தி முறைமைகளுக்கு தனிநபர் கடன்கள்

  • முக்கிய அம்சங்கள்

    · விரைவானதும் தொந்தரவற்றதுமான சேவை

    · 5 வருடங்கள் வரையில் நெகிழ்வான மீள்செலுத்தும் காலப்பகுதி

    · பெயர்குறித்த கட்டணங்களது முற்கூட்டிய மற்றும்/அல்லது பகுதியளவான தீர்ப்பனவுகளுக்கான நெகிழ்வுத்தன்மை

    · மதிப்புமிக்கதும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையால் பரிந்துரைக்கப்பட்டதுமான விநியோகத்தரிடமிருந்து பெறப்படும் உபகரணங்கள் 

    · சேவை வழங்குநர்களிடமிருந்து இலவச சாத்திய கள ஆய்வு மற்றும் ஆலோசனை சேவைகள்

    · ரூ.500,000 தொடக்கம் ரூ. 4,500,000 வரையில் நிதி

    · பிணைப்பொறுப்புக்கள் தேவையில்லை

    · மொத்த ஆகுசெலவில் 75% வரையில் கடன்

     

     

    யார் விண்ணப்பிக்கலாம்?

    · வதிவிட இலங்கை பிரஜைகள்

    · செல்லுபடியான பணி அனுமதிகளுடன் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள், சம்பளம் பெறும் ஊழியர்கள், சுய-தொழிலாளர்கள், மற்றும் தொழில்முறையாளர்கள்

    · இணை விண்ணப்பதாரியின் நிலை – முதன்மை விண்ணப்பதாரரான துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கலாம். 

     

    முற்தேவைப்பாடுகள்

    சூரிய ஒளிச்சக்தி தகடுகள் பொருத்தப்படவுள்ள வளாகமானது விண்ணப்பதாரரினாலோ, அவரது வாழ்க்கைத்துணையாலோ, பிள்ளையாலோ அல்லது விண்ணப்பதாரரின் பெற்றோரினாலோ உடைமைக்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். 

     

    வயது எல்லை

    18 தொடக்கம் 65 வயது வரையில்

     

    உங்களுக்குத் தேவையானது

    · அடையாளப்படுத்தல் ஆவணங்கள் - தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு  அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்

    · தொழில் விபரங்களை உறுதிப்படுத்தி தொழில்வழங்குநரிடமிருந்தான கடிதம்

    · சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட சம்பளச்சிட்டை

    · கடந்த 3 மாதங்களின் மின்சார பட்டியல்

    · தேர்ந்தெடுத்த விநியோகத்தரிடமிருந்து மூல விலைச்சிட்டை

    · இறுதி உறுதியின் பிரதி (உடைமையை உறுதிசெய்வதற்கு மாத்திரம்)