சிரேஷ்ட பிரஜைகளுக்காக கவர்ச்சியான வட்டி வீதங்களுடன் விசேட நிலையான வைப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம் - 2025
உற்பத்தி பொதுநோக்கு:
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம் 2025 ஆனது 60 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு வளப்படுத்தப்பட்ட வருமானம் மற்றும் நிதி பாதுகாப்பினை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகிறது.
தகுதிநிலைகள்:
- வைப்புக் கணக்கு ஆரம்பிக்கும் தினத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.
- உறுதிப்படுத்தலுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம்.
- மாதாந்த வருமானம் ரூ.150,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
திட்ட காலப்பகுதி:
01 ஜூலை 2025 முதல் 31 டிசம்பர் 2025 வரை.
வைப்பு வகை மற்றும் காலம்:
12 மாத நிலையான வைப்பு – வட்டி மாதாந்தம் செலுத்தப்படும் (தன்னியக்க புதுப்பிப்பு இல்லை).
வட்டி வீதம்:
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) + ஆண்டுக்கு 3% அல்லது வங்கிப் பத்திர வீதம் + 3%, இரண்டில் அதிகமானது.
அதிகூடிய வைப்பு:
ஒரு வைப்பாளருக்கு அதிகபட்சம் ரூ.1 மில்லியன் (மொத்த வைப்பு பெறுமதி).
கூட்டு வைப்புகள்:
இருவரும் சிரேஷ்ட பிரஜைகளாக இருந்தால் மட்டுமே அனுமதி.
முதிர்வுக்கு முன்னர் மீளப்பெறல்:
அனுமதிக்கப்படும். தண்ட வட்டி இல்லை; ஒப்புக்கொண்ட காலத்திற்கு வட்டி செலுத்தப்படும்.