மீண்டும் ஒருமுறை வீட்டுக்கு சாண்டா
NDB உடன் இணைந்து இப்பண்டிகையை கொண்டாடி சாண்டா சலுகைகள் 2025 ஊடாக எதிர்பாரா பரிசுகளை வென்றிடுங்கள்! தயவுசெய்து கீழுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசித்து நீங்கள் அல்லது உங்களது குழந்தை எவ்வாறு இதில் பங்கேற்கலாம் என்பதனை அறிந்திடுங்கள்.
சலுகை காலம்
இச்சலுகையானது 1 ஒக்டோபர் 2025 முதல் 15 டிசெம்பர் 2025 வரையில் இடம்பெறும்.
தகுதிநிலை:
15 வயது மற்றும் அதற்கும் கீழுள்ள பிள்ளைகள்
பின்வரும் NDB சிறுவர் கணக்கு வகைகளுக்கு செல்லுபடியாகும்:
· ஷில்பா சேமிப்புக் கணக்கு
· PRVJ சிறுவர் கணக்கு
· இஸ்லாமிய வங்கிச்சேவை சிறுவர் கணக்கு
· PFCA சிறுவர் சேமிப்புக் கணக்கு
· தற்போதிருக்கின்ற மற்றும் புதிய கணக்குடைமையாளர்கள் இருவரும் தகுதியுடையவராவர்.
· Neos Pixel கணக்கு இச்சலுகைக்கு தகுதியுடையதாகமாட்டாது.
· குறைந்தபட்சம் இ.ரூ. 50,000 அல்லது அதற்கு மேலாக வைப்புகள் பிள்ளையை சாண்டாவின் பரிசுக்கு தகுதியுடையதாக்கும்
· தகுதியுடைய வைப்பு அடுக்குகள்: இ.ரூ. 50,000 / இ.ரூ. 100,000 / இ.ரூ. 500,000 / இ.ரூ. 1,000,000
· இ.ரூ. 100,000 அல்லது அதற்கு மேற்பட்ட வைப்புகள் பரிசுக்கான இ.ரூ. 50,000 இன் மடங்குகளாக கருத்திற்கொள்ளப்படும்.
பங்கேற்பது எவ்வாறு
· NDB வங்கியின் ஏதேனும் கிளையில் தகுதியுடைய சிறுவர் கணக்குகளில் தகுதிபெறும் வைப்பொன்றினை மேற்கொள்ளுங்கள்.
· வைப்பினை மேற்கொண்டதன் பின்னர் கிளையிலுள்ள ”விருப்ப பட்டியல்” படிவத்தினை பூரணப்படுத்துங்கள்
· பின்வருவன ஊடாக தகுதிபெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் டிசெம்பர் மாதத்தில் விநியோகிக்கப்படும்.
· சாண்டா விஜயம் (பிராந்தியம் மற்றும் கிடைப்பனவான தன்மை என்பவற்றைப் பொறுத்து கிளையினால் ஒழுங்கமைப்பட்டது), அல்லது
· கிளைகளில் பெற்றுக்கொள்ளல்- பிள்ளைகளின் சார்பில் பரிசுகளை பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்கள் அழைக்கப்பெறுவர்.
பரிசு விநியோகம்
· பரிசுப் பொதிகளின் விநியோகம் டிசெம்பர் 2025 இன் முதல் வாரத்தில் ஆரம்பமாகும்.
· கொழும்பு மற்றும் கொழும்பு மாநகரத்திற்கான விநியோகங்கள் NDB வங்கியின் மத்திய சந்தைப்படுத்தல் அணியினால் ஒழுங்குபடுத்தப்படும்.
· பொருட்களின் மட்டுப்பாடுகளினால் குறிப்பிட்ட திகதிகளை உத்தராவாதமளிக்க முடியாது.
· தேவையேற்படின் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர் /பாதுகாவலர் தொடர்புகொள்ளப்படுவர்.
· தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்: குறிப்பிட்ட திகதிகளில் விநியோகிக்குமாறான கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது.