NDBஇல், எமது ஊழியர்களை பெரிதாக சிந்திக்கவும் அதைவிடப் பெரிதாக சாதிக்கவும் ஊக்குவிக்கின்றோம். எமது ஊழியர்கள் மற்றும் எமது வியாபாரம் என பரஸ்பரம் நாம் முதலிடுகின்றோம். எமது அணியினை வளர்த்தெடுப்பதற்கான எமது முயற்சிகளின் முக்கிய கூறாக தொழிலாளர்களின் நலவாழ்வு கருதப்படுவதுடன் NDB இன் ஒவ்வொரு ஊழியரினதும் உடல், சமூக, அறிவுசார் விருத்தியினை உறுதிப்படுத்துவதற்காக எமது வினைத்திறனான நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
எம்முடைய ஒட்டுமொத்த சமுதாயத்தினருடனும் நாம் கொண்டாடுகின்றோம்! எமது ஊழியர்களின் குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் எமது சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஆரத்தழுவிக்கொள்வதுடன் NDB இன் சமூகச் செயற்பாடுகள் ஊழியர்களின் குடும்பங்களையும் எமது பெறுமதிமிப்பிற்குரிய விருந்தினர்களையும் உள்ளடக்குகின்றன.
சமூக விருத்திக் கூடம்
வெளிக்களப் பணிகளில் வெளிப்பட்ட பிணைப்பானது வேலைத்தளத்திலான கூட்டுணர்வின் ஒரு வடிவத்தினை வெளிப்படுத்துகின்றது என நாம் நம்புகின்றோம். எமது சமூக நாட்காட்டியானது எமது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பொழுதுபோக்கு மற்றும் மனமகிழ் செயற்பாடுகளை வழங்குகின்ற நிகழ்வுகளது வரிசையினால் நிரம்பிவழிகின்றது.
உடர்சார் விருத்தி
துடிப்புடன் காணப்படவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளின் நன்மைகளைப் பெறவும் நாம் எமது ஊழியர்களை ஊக்குவிக்கின்றோம். ஊழியர்களது உடல்சார் விருத்தியினை உறுதிப்படுத்துவதற்காக NDB இல் பிரத்தியேக உடற்பயிற்சிக்கூடம் மற்றும் ஏனைய விளையாட்டு செயற்பாடுகளுக்கான அணுகல் வழங்கப்பெற்றுள்ளது.
அறிவுசார் விருத்திக் கூடம்
NDB அறிவுசார் விருத்தியினை வழங்க வடிவமைக்கப்பட்ட பரந்துபட்ட கற்றல் மற்றும் அபிவிருத்தி வாய்ப்புக்களை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குகின்றது.