NDB மிகுதிப் பரிமாற்றத்துடன் உங்களது பணப்பையின் நன்மைகளை திறந்திடுங்கள். உங்களது ஏனைய வங்கிகளின் கடனட்டை மிகுதிகளை உங்களது NDB கடனட்டைகளுக்கு பரிமாற்றுவதில் சௌகரியங்களை அனுபவித்து இயலுமான மாதாந்த தவணைகளில் மீளச்செலுத்திடுங்கள்.
முக்கிய அம்சங்கள்
· Platinum, Signature, மற்றும் Infinite எனும் NDB முதன்மை கடனட்டை கொண்டுள்ளவர்களுக்கென பிரத்தியேகமானது (கம்பனி அட்டைகள் புறமொதுக்கப்பட்டுள்ளது)
· குறைந்தபட்சம் ரூ.100,000 மற்றும் உங்களது அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையில் 80% வரை, எஞ்சியுள்ள நிலுவைக்கு அமைவாக பரிமாற்றிடுங்கள்
· போட்டித்தன்மைமிக்க செயன்முறைப்படுத்தல் கட்டணம் மற்றும் கட்டமைப்பு கட்டணங்களுடன் 60 மாதம் வரையில் சமமான மாதாந்த தவணைகளில் மீளச்செலுத்திடுங்கள்.
· அனுமதிக்கப்பட்ட BT தொகை CEFT ஊடாக உங்களது ஏனைய வங்கி கடனட்டைகளுக்கு 3 வேலைநாட்களுக்குள் பரிமாற்றப்படும்.
· காலப்பகுதிகள் மற்றும் செயன்முறைப்படுத்தல் கட்டணங்கள் காணப்படுகின்றன.
| கால அளவு | 12 மாதங்கள் | 24 மாதங்கள் | 48 மாதங்கள் | 60 மாதங்கள் |
| மாதாந்திர செயலாக்கக் கட்டணம் | 0% | 0.50% | 0.70% | 0.70% |
| AER (Annual Equivalent Rate) | 0% | 15.83% | 16.46% | 16.52% |
| அமைப்புக் கட்டணம் (ரூபாய்) | 5,000 | 5,000 | 5,000 | 5,000 |
மேலதிக தகவல்கள்
· உங்களிடம் காணப்படும் கடன் எல்லையில் மொத்த BT தொகை தடுத்துநிறுத்தப்பட்டு மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டதும் உடனடியாக விடுவிக்கப்படும்.
· மாதாந்த தவணைகள் உங்களது கடனட்டைகளில் பற்று வைக்கப்பட்டு, முதன்மை மற்றும் செயன்முறைப்படுத்தல் கட்டணங்களும் உள்ளடக்கப்படும்.
· தவணைத் திகதியன்று, BT தவணைகள் உள்ளிட்ட, மொத்த மாதாந்த கூற்று தீர்க்கப்படவில்லையாயின், நியம கடனட்டை வட்டி வீதம் விதிக்கப்படும்.
· கொடுப்பனவுகளிலான தவறுகையின் போது BT வசதியினை மூடுவதற்கும் முழுதாக நிலுவையாகக் காணப்படும் தொகையை பற்றுவைப்பதற்கும் NDB வங்கி உரித்துடையதாகும்.
· முற்கூட்டிய தீர்ப்பனவானது எஞ்சியிருக்கும் BT நிலுவைகளின் 4% கட்டணத்திற்கு அமைவானதாகும்.
· கொடுப்பனவு தாமதங்களினால் ஏனைய வங்கி கடனட்டைகளின் மீதான ஏதேனும் வட்டி, மேலதிகக் கொடுப்பனவு அல்லது கட்டணங்களுக்கு NDB வங்கி பொறுப்புடையதாகமாட்டாது.
விண்ணப்பிப்பது எவ்வாறு?
மிகுதி பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி உங்களது ஏனைய வங்கி கடனட்டை சமீபத்திய கூற்றுகளுடன் contact@ndbbank.com இற்கு வழங்கவும்.
அல்லது உங்களுக்கு அருகிலுள்ள NDB வங்கி கிளையில் கையளிக்கவும்.
மிகுதி பரிமாற்றம் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்க இங்கு சொடுக்கவும்
மிகுதி பரிமாற்ற நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பதிவிறக்க இங்கு சொடுக்கவும்