எந்தவொரு வணிகத்திலும் வெற்றிக்கான மிகமுக்கிய அம்சமாக நிதி முகாமைத்துவம் மாறிவிட்டதன் காரணமாக அதற்கான நவீன தொழிநுட்பத்தினையும் தெரிவுகளையும் உங்களுக்கு வழங்குவதில் நாம் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.
முக்கிய அம்சங்கள்
NDB வங்கியின் இலத்திரனியல் விநியோக முறைமை> NEOS Biz kw;Wk; NEOS Corporate என்பது காசு மற்றும் வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒற்றைத் தள அணுகலை வழங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பயனர் நேய முறைமையொன்றாகும். NEOS Biz kw;Wk; NEOS Corporate என்பன காசு> திரவத்தன்மை மற்றும் வர்த்தக நிதி செயற்பாடுகளை சௌகரியமானதும் பாதுகாப்பானதுமானவொரு சூழலில் முகாமைத்துவம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றது.
வங்கிச்சேவை கொடுக்கல் வாங்கலானது வங்கிச்சேவையானது எமது வாடிக்கையாளர்களின் உள்ளுர்> பிராந்திய மற்றும் பூகோள அளவிலான தேவைகளை ஒருமுகப்படுத்துகின்றது. கொடுக்கல் வாங்கல் வங்கிச்சேவையானது சேவைநாடுநர்கள் தங்களது வாணிபத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் உலகளாவியதும் மற்றும் தனித்துவமாக உருவாக்கப்பட்டதுமான தீர்வுகளை வழங்குவதுடன் வாழ்விற்கான புதியத் தீர்வுகளை கொணரும் புத்தாக்கங்களிலும் முதலிடுகின்றது.
நாம் யார்
எமது சேவைநாடுநர்களுக்கு பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புக்களை புதிய தொழிநுட்பங்கள் திறந்துள்ளமையினால்> புத்தாக்கத்தின் வலுவான பாரம்பரியம் மற்றும் தனித்துவமான வர்த்தக தீர்வு வலையமைப்பொன்றினை கட்டடைப்பதன் ஊடாக டிஜிட்டல் எதிர்காலத்தை தாபித்து வாழ்க்கைக்கான புதிய தீர்வுகளை கொணர NDB புத்தாக்கங்களில் முதலிடுகின்றது. கொடுக்கல் வாங்கல் வங்கிச்சேவை வணிகர்களினால் பெறப்படும் உள்வரும் கொடுப்பனவுகளுக்குள் பாரிய வெளிப்படைத்தன்மையை வழங்கி பல்தேசிய தொழிநுட்ப கம்பெனியின் B2B சந்தை இடத்தை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதனை கற்றுவருகின்றோம்.
நாம் எவ்வாறு உதவுகின்றோம்
NDB டிஜிட்டல் அலைவரிசைகள்
எமது விருதுபெற்ற NDB NEOS டிஜிட்டல் வங்கிச்சேவை மேடையானது NDB காசு முகாமைத்துவம் மற்றும் வர்த்தக தீர்வுகள் அல்லது கம்பனி பயனாளர்களுக்கான NEOS Corporate மற்றும் வர்த்தக வங்கிச்சேவை/SME பயனாளர்களுக்கான NEOS Biz உள்ளடங்கலான தீர்வுகளுக்கான அணுகலை எங்கேயும் எப்போதுமாக வழங்குகின்றது.
NEOS Corporate
NDB வங்கியின் காசு முகாமைத்துவ முறைமையானது வங்கியினால் வழங்கப்படும் காசு மற்றும் வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒற்றைத் தள அணுகலை வழங்கும் ஒருங்கிணைக்கப்பட்டதும் பயனர் நேயமானதுமான முறைமையொன்றாகும்.
NEOS - BIZ
NEOS - BIZ என்பது விசேடமாக ளுஆநு வர்த்தகங்களை இலக்குவைத்து மொபைல் செயலிகள் வடிவில் இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு உற்பத்தியாகும். NEOS – BIZ இனை எந்தவொரு திறன்பேசியிலும் கட்டணமின்றி தரவிறக்கிக்கொள்ளலாம் என்பதுடன் சேவைக்காக பதிவுசெய்யவும் மற்றும் எல்லைகளையும் ஒதுக்குகளையும் குறித்தொதுக்கப்படக்கூடிய தனிநபர் பயனார்களையும் உங்களால் முடியும். அவர்கள் அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை மாத்திரம் மேற்கொள்வர்.
மூலதனச் சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்கான வங்கிச் சேவையாளர்கள்
NDB காசு முகாமைத்துவ அலகானது உங்களது அனைத்து மூலதன சந்தை கொடுக்கல் வாங்கல்களுக்குமான வங்கிச்சேவையாளராக செயற்படுகின்றது.
காசு முகாமைத்துவம்
காசு மற்றும் காசோலை சேகரிப்பு மற்றும் முகவர் வங்கிச்சேவையின் கீழ் சேவைகளை வழங்குதல்
NDBவங்கி கம்பனி> வியாபார வங்கிச்சேவை மற்றும் செயற்றிட்ட நிதி சேவைநாடுநர்களுக்கான எமது சேவைகளை விரிவுபடுத்த பின்வரும் முகவர்களை இணைத்துள்ளது.
கம்பனி நிகழ்நிலை வங்கிச்சேவை
NEOS கம்பனியானது சௌகரியமானதும் பாதுகாப்பானதுமான சூழலில் காசு> திரவத்தன்மை மற்றும் வர்த்தக நிதி செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றது.
ஊசேநி மற்றும் ஊநநி நிகழ்நிலை கூற்றுகள்
NDB காசு முகாமைத்துவ அலகானது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தினது நிகழ்நிலை கூற்றுக்களுக்கான தளங்களை வளப்படுத்துகின்றது.
கம்பெனியின் திரவத்தன்மையை பேணியவாறு காசுப்பாய்ச்சலினை வினைத்திறனாக சேகரிக்கவும்> விநியோகிக்கவும் மற்றும் முதலிடவுமாக உங்களுக்கு உதவும் பொருத்தமான காசுப்பாய்ச்சல் சேவைகளை நாம் வழங்குகின்றோம்.
வங்கிச்சேவை தொடர்பால்
NDB வங்கி உலகளாவிய ரீதியில் பல்வேறு வங்கிகளுடன் தொடர்பாடல் உறவுகளை பேணிவருகின்றமையானது இக்கொடுக்கல் வாங்கலுக்கான வலையமைப்பொன்றையும் வழங்குகின்றது.
நேருக்கு நேர் தீர்வு
NDB வங்கி கம்பனி வாடிக்கையாளர்களுக்கான நேருக்கு நேர் (H2H) கொடுப்பனவு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன்> அதனது கம்பனி டிஜிட்டல் வங்கிச்சேவை தளத்தினையும் வளப்படுத்தியுள்ளது. இத்தளமானது கம்பனி வாடிக்கையாளர்களுக்கு நவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளது பொருத்தமான மற்றும் சக்திவாய்ந்த தெரிவுகளை வழங்குகின்றது.