NDB - WRIZTPAY

NDB - WriztPay සමඟ ගෙවීම් වල අනාගතය අත්විඳින්න — පහසුව සහ ආරක්ෂාව එකට හමුවෙයි, ගනුදෙනු සිදුවීම පහසු වේ. වැඩි දැනුමක් සහ සම්බන්ධිත මූල්‍ය අත්දැකීමක් ලබාදීමට අප සමඟ එක්වන්න. නව්‍යකරණය අත්විඳින්න, NDB අත්විඳින්න.

NDB - WriztPay மூலம் எதிர்கால பணப்பரிவர்த்தனையை அனுபவிக்கவும் — வசதி மற்றும் பாதுகாப்பு இணைகின்றது, பரிவர்த்தனைகள் எளிதாக நடக்கின்றன.
சமார்த்தமான, மேலும் இணைந்த நிதி அனுபவத்திற்கான இந்த பயணத்தில் எங்களுடன் சேருங்கள். புதுமையைக் கொண்டாடுங்கள், NDB-ஐ அனுபவிக்கவும்.

wrizt pay

NDB - WriztPay என்றால் என்ன?
NDB - WriztPay என்பது உங்கள் பரிவர்த்தனை அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட புதுமையான கட்டணத் தீர்வாகும். மெல்லிய கைப்பட்டையாக வடிவமைக்கப்பட்ட இது, உங்கள் தினசரி வாழ்க்கையில் சிறப்பாக ஒருங்கிணைகிறது மற்றும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய உங்களை வலுப்படுத்துகிறது.
 
NDB - WriztPay எப்படி செயல்படுகிறது?
அதிநவீன Near Field Communication (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, NDB - WriztPay கட்டண முனையங்களுடன் தொடர்பு கொண்டு, தொடுதலற்ற கார்டு பரிவர்த்தனைகளின் வசதியை வழங்குகிறது. இலங்கை ரூ. 25,000 வரை பரிவர்த்தனை வரம்புடன், இந்த வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான PIN நுழைவு தேவையாகும், இது ஒவ்வொரு கொள்முதல் போதும் மனநிம்மதியை வழங்குகிறது.
 
NDB - WriztPay ஐ நான் எவ்வாறு பெறலாம்?
NDB கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கே பிரத்யேகமாக வழங்கப்படும் இரண்டாம் நிலை கட்டண விருப்பமாக இது கிடைக்கிறது. இதைப் பெற, ரூ. 5000 என்ற ஒரே முறை வெளியீட்டு கட்டணம் மற்றும் துணை கார்டு வைத்திருப்போருக்கான வருடாந்திர கட்டணங்கள் பொருந்தும்.
 
NDB - WriztPay வாடிக்கையாளர்களுக்கு தரும் நன்மைகள் என்ன?
வசதி: கைப்பட்டையை ஒரு தொட்டால் பரிவர்த்தனைகளை எளிதாக்கி, கார்டுகள் அல்லது ரொக்கம் எடுத்துச் செல்லும் சிரமத்திலிருந்து விடுபடுங்கள்.
பாதுகாப்பு: சாதாரண கார்டு சிப் பாதுகாப்பு அம்சங்களுக்குச் சமமான மேம்பட்ட சிப் பாதுகாப்புடன், உங்கள் பரிவர்த்தனைகள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.
அணுகல் வசதி: NDB NEOS மொபைல் வங்கி பயன்பாட்டின் மூலம் உங்கள் அணிகலன் கட்டண சாதனத்தை எளிதாக மேலாண்மை செய்யுங்கள், இதன் மூலம் உங்கள் நிதிகளை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.
 
NDB - WriztPay அனைத்து வணிகர்களுடனும் இணக்கமானதா?
ஆம், NDB - WriztPay VISA தொடுதலற்ற கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வணிகர்களுடனும் இணக்கமானது, இதன் மூலம் உங்களுக்கு முடிவில்லா வாய்ப்புகளைத் திறக்கிறது.
 
NDB - WriztPay உடன் கட்டணங்களின் எதிர்காலத்தை அனுபவியுங்கள் — இங்கு வசதியும் பாதுகாப்பும் இணைகிறது, பரிவர்த்தனைகள் எளிதாக மாறுகின்றன. புத்திசாலித்தனமான, இணைந்த நிதி அனுபவத்திற்கான இந்த பயணத்தில் எங்களுடன் சேருங்கள். புதுமையை அணுகுங்கள், NDB-யை அணுகுங்கள்.